சந்தானம் வழி தனி வழி
tisho
Monday, March 8, 2010
7:24 AM

டி.வி.யில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சந்தானம் காமெடியில் தனக்கென்று ஒரு நிலையை எட்டியிருக்கிறார். இத்தனை நாள் கால்ஷீட்டுக்கு இத்தனை லட்சம் கொடுத்தால் வருவேன் என்று டிமாண்டு வைத்துப் பேசும் நடிகராக உயர்ந்துள்ளார். இயக்குனர் சொல்லும் காமெடி காட்சிகளில் தனக்கும் தோன்றுவதை சொல்லி அனுமதி கேட்டுவிட்டு காட்சிகளை மெருகேற்றுவார். தியேட்டர்களில் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பு இருக்கும். தற்போது தனக்கென ஒரு நடிகர்கள் குழுவை உருவாக்கிக் கொண்டு தான் நடிக்கும் படங்களில் வரும் காமெடி காட்சிகளை தானே தயார் செய்து அதற்கென தனியாக சம்பளமும் பெற்றுக் கொள்கிறார். அந்தக் காமெடிக் குழுவில் நடிகர் சிங்கமுத்துவும் இருக்கிறார். இவர் பல வருடங்களாக நடிகர் வடிவேலு காமெடி குழுவில் இருந்தவர். தற்போது சந்தானம் கைவசம் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன.
0 Comments to "சந்தானம் வழி தனி வழி"
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment